தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப மனு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 11 October 2022

தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப மனு

தமிழகம் முழுவதும் தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மதுரை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டியிட அக்கட்சியினர் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.


இந்த நிகழ்வில் தென் மண்டல பெருப்பாளரும், முன்னாள் MLA பாரத்தசாரதி, மதுரை மாவட்ட தேமுதிக தேர்தல் ஆனையாளர் பாலன் மற்றும் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் கணபதி ஆகியோர் உடனிருந்தனர்.


இன்று நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் திருமங்கலம் நகரச் செயலாளர் ராதாகிருஷ்ணன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் பாண்டியன், கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் கருணாநிதி, கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் பச்சைமலை, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கதிரேசன், அவனியாபுரம் பகுதி செயலாளர் செந்தில்குமார், பசுமலை பகுதி செயலாளர் மணிகண்டன், உசிலம்பட்டி நகர செயலாளர் அசோகன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், மற்றும் நகரகவுன்சிலர் ராஜகுரு,ஒன்றிய கவுன்சிலர்கள் கே. அழகர்சாமி, திருமதி தீபா சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது விருப்பமனுவை பெற்றுக் கொண்டார்கள். இதில் தேமுதிகவின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு உட்கட்சித் தேர்தலில் தங்களின் விருப்பு மனுவை பெற்றுக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad