தீபாவளியையும் விடல, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக பிரசாரத்துக்கு மிகவும் பலம் சேர்த்தது. ஒற்றை செங்கல்லை கையில் வைத்து காட்டி உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரம் மக்களை வெகுவாக சென்றடைந்தது.
அதிமுக..பாஜகவுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் திமுக ஆட்சி அமைத்து இரண்டாம் ஆண்டை நெருங்கும் நிலையில் ஆட்சி அமைத்த நாளில் இருந்து இன்று வரை அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசவே இல்லை. தமிழகத்தை சேர்ந்த எம்பிக்களும் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் மறந்த விஷயங்களில் ஒன்றாக எய்ம்ஸ் இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் மதுரை வந்த மத்திய அமைச்சர் பேசும்போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. விரைவில் அந்த மருத்துவமனையை பிரதமர் திறந்து வைப்பார் என்று தெரியாத்தனமாக பேசி விட்டு சென்றார்.
ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் அமைச்சர் பேச்சை கிண்டலடித்தன. எந்த பணியும் தொடங்கப்படாமல் காலியாக கிடக்கும் நிலத்தில் சிலர் மருத்துவமனையை தேடினர். சிலரோ, 95 சதவீதம் பணிகள் முடிந்த மருத்துவமனையை காணோம் என்று போலீசிலும் புகார் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் அரசியல் கட்சியினர் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் குறை கூறி, பிரச்சினையின் கோணத்தை மாற்றி விட்டனர்.
அதற்கு ஏற்பட்ட அரசியல் சமுதாய நிகழ்வுகளால் மக்களும் அடுத்த கபஜெக்ட்டுக்கு தயாராகி விட்டனர். இந்த நிலையில் தீபாவளிக்கு விற்பனைக்கு வந்துள்ள டி..ஷர்ட்டுகள் திரும்பவும் எய்ம்சை ஞாபகப்படுத்துகின்றன.
அரியலூர் மாவட்ட ரெடிமேட் ஷோரூம்களில் தீபாவளி விற்பனை மும்முரமாக உள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்,முகப்பில் தொங்க விடப்பட்டுள்ள வாசகங்கள் அடங்கிய டி.ஷர்ட்டுகளை ஒரு நிமிடம் கவனித்து விட்டே செல்கின்றனர்.
தற்போது எய்ம்ஸ் என்ற பெயரில் டி.ஷர்ட் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் ரவுண்ட் நெக்க வடிவமைப்பில் வந்துள்ள அந்த டி. ஷர்ட்டில் மதுரைக்காஞ்சி எய்ம்ஸ் வருமா வராதா என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அரசியல் அரசுகள் விமர்சனங்கள் ஆகியவற்றை கடந்து பண்டிகையிலும் எய்ம்ஸ் கலந்து விட்டதை என்னவென்று சொல்வது.
No comments:
Post a Comment