மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே சாலையில் கிடக்கும் புரதான கற்சிலை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 7 October 2022

மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே சாலையில் கிடக்கும் புரதான கற்சிலை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலை சிஎஸ்ஐ பள்ளி அருகில் சாலையில் மழைநீர் செல்ல தோண்டப்பட்ட கால்வாய் அருகே இரண்டரை அடி உயரம் உள்ள கற்சிலை ஒன்று காணப்படுகிறது. இரு கைகள் சிதைந்த நிலையில் உள்ள அம்மன் சிலை மிகவும் பழைமை வாய்ந்த  சிலையாக கருதப்படுகிறது.


சிதலடைந்த அம்மன்  சிலை எவ்வாறு இந்த பகுதியில் வந்தது, இது சரியாக எந்த நூற்றாண்டுக்குட்பட்ட சிலை, இந்த சிலையில் உள்ள அம்மன் யார் போன்ற விவரங்கள் தொல்லியல் துறை இந்த சிலையை ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் தெரிய வரும். 

No comments:

Post a Comment

Post Top Ad