இந்த போட்டிகளை, விவேகானந்த கல்லூரி உடற்பியிற்சி இயக்குனர் முனைவர் சீனி முருகன் ஒருங்கிணைத்தார். மேலும் ,போட்டிகளை விவேகானந்தர் கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். விவேகானந்தா கல்லூரி, சௌராஷ்ட்ரா கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, தியாகராஜா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் செந்தாமரை கல்லூரி, மதுரை கல்லூரி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றனர்.
அதுபோல், அந்தந்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர்களும் பங்கு பெற்றனர். இதில், இறகு பந்து போட்டியில் சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதலிடத்தையும், சௌராஷ்ட்ரா கல்லூரி இரண்டாம் இடத்தையும், பெற்றது.
சதுரங்க போட்டியில், சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதலிடத்தையும், இரண்டாவது இடத்தையும் மதுரை கல்லூரி பெற்றது. மேலும், மேஜை பந்து போட்டியில், முதல் இடத்தை சரஸ்வதி நாராயணன் கல்லூரியும், இரண்டாம் இடத்தை மதுரை கல்லூரியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு விவேகானந்த கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
No comments:
Post a Comment