மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் பாலமேடு சாத்தியார் அணை பாசனத்திற்காக, அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன.
இதனால் பாலமேடு சாத்தியார் அணைக்கு கால்வாயில் மூலம் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, பாசனத்திற்காக விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று, அமைச்சர் மூர்த்தி அணையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மற்றும் வருவாய் பேரூராட்சி துறை அலுவலர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment