மதுரை திருமங்கலம் அடுத்துள்ள பேரையூர் தாலுகா உட்பட்ட கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகளில் பயன்படுத்தி வீணாகும் கழிவு நீர்களை எவ்வாறு சுத்திகரித்து நிலத்தடி நீர் அதிகரிப்பது குறித்து வரைபடம் வரைந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
வீடுகளில் பயன்படுத்தி வீணாகும் கழிவுகளை குறைந்த செலவில் வீட்டில் அருகாமையே சுத்திகரிப்பு உருவாக்கி கழிவு நீரை சுத்தமான நீராக மாற்றி மீண்டும் பயன்படும் வகையில் செய்வதற்காக கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இதற்கான விழிப்புணர்வு வரைபடம் வரையப்பட்டுள்ளது.
இதனால் அதிகளவு கழிவுநீர் தேங்காத வண்ணம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் தவிர்க்க பேரு உதவியாக இருக்கும் என ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக திருமங்கலம் செய்தியாளர் வினோத் பாபு.
No comments:
Post a Comment