புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வரப்படும் பெரும்பாலான அரசுப் பள்ளிக் குழந்தைகள் வரிசையாக நுழைந்து சுற்றிப் பார்த்து விட்டு வெறும் கையோடு திரும்பி விடுகின்றனர். அவர்களின் பொருளாதார சூழலும், வாசிப்பு அனுபவமும் இதற்கு ஓர் காரணம். அவர்களிடயே பள்ளிப் பருவத்திலேயே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக, 'இல்லம் தேடிக் கல்வி' அரங்கிற்கு வருகை தந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'புத்தகக் கண்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்?' நூல் இலவசமாக வழங்கப்பட்டன. இல்லம் தேடி கல்வி திட்ட பாடநூல் உருவாக்கக் குழுவில் அங்கம் வகிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களான சக.முத்துக்கண்ணன், ச.முத்துக்குமாரி, ரா.ராணி குணசீலி ஆகியோர் இணைந்து இந்த நூலை எழுதியதோடு, அவர்களே அச்சிட்டு கொடுத்தனர்.
இந்த நூலை பள்ளி மாணாக்கர்களை அங்கேயே வாசிக்க வைத்து, கலந்துரையாடலும் நிகழ்த்தப்பட்டது. இந்நூலை மலிவான விலையில் பாரதி புத்தகாலயம் வடிவமைத்திருந்தது.
No comments:
Post a Comment