மதுரை அருகே கஞ்சா வழக்கில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கைது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 6 October 2022

மதுரை அருகே கஞ்சா வழக்கில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கைது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டியில் அதிமுகவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார் என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார் 


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த செல்வகுமார் இவர் கருப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் சோழவந்தான் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது


 நேற்று இரவு கருப்பட்டி பகுதியில்.சோழவந்தான் போலீசார் ரோந்து சென்ற போது கருப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார் 800 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டு அவரிடம் விசாரித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்


. இவர் மீது ஏற்கனவே பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டுறவு சங்க தலைவரே கஞ்சா வைத்திருந்தது கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் இரும்பாடி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad