மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மேலக்கால் கச்சிராயிருப்பு கீழ மட்டையான்.ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர்.
அப்போது 100 நாள் பணிகளை அனைத்து மக்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் குடிநீரை முறையாக வழங்க வேண்டும் தெரு விளக்குகளை பராமரித்து கொடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை எடுத்து மழை நீர் மற்றும் கழிவுநீர்.வெளியேற வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கையாக வைத்தனர்.
அதனை கேட்டுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் துணைத் தலைவர் சித்தாண்டி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
No comments:
Post a Comment