மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 1 October 2022

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா.

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பாலை, யாதவர் பெண்கள் கலைக்கல்லூரி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாமை, வணிகவரி  மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி துவக்கி வைத்து, அரசு  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 


மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர்  ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாமும்,செயற்கை உபகரணங்களை, அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். 

No comments:

Post a Comment

Post Top Ad