மதுரையின் இன்றைய குற்ற சம்பவங்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 12 October 2022

மதுரையின் இன்றைய குற்ற சம்பவங்கள்.


கே புதூர் காந்திபுரம் கண்மாய் கரையில் வாளுடன் பதுங்கி இருந்த நான்கு பேர் கைது.

கே புதூர் காந்திபுரம் கண்மாய்கரையில் வாளுடன் பதுங்கி இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கே.புதூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர். இவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காந்திபுரம் கண்மாய்க்கரையில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.அவர் கிழக்கு பகுதியில் நான்கு பேர் வாள்களுடன் பதுங்கி இருந்ததை கண்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்தார்.


பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் கடச்சனேந்தல்  அய்யனார் காலனி  முத்துகிருஷ்ணன் மகன் சரவணன் என்ற கோளாறு சரவணன் 26 ,கே புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்ற மெண்டல் கணேசன், காந்திபுரம் சுபாஷ் சந்திரபோஸ் மகன் சதீஷ் 23, காந்திபுரம் நான்காவது தெருவை சேர்ந்த பிரகாஷ் என்ற பல்லு பிரகாசி 22 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார். 


அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆளுக்கு ஒரு வாள் வீதம் நான்கு வாள்களை மறைத்து வைத்திருந்தனர் .அவற்றை பறிமுதல் செய்தார்.


ஜெய்ஹிந்த்புரத்தில் அரிசி ஆலை உடைத்து கொள்ளை.

ஜெய்ஹிந்த்புரத்தில் அரிசி ஆலையை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற அசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் விவேகானந்தர் தெரு பாலாஜி நகரை சேர்ந்தவர் குணசேகரன் 43.இவர் சுப்பிரமணியபுரம் நல்லமுத்து பிள்ளை காலனியில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு மூடி விட்டு சென்று மறுநாள் மில்லை திறக்க வந்தார்.மில் உடைக்கப்பட்டிருந்தது. மில்லுக்குள் வைத்து இருந்த பத்து ஜோடி அறவை பிளேட்டுகள், பணம் ரூ 8ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 


இந்த சம்பவம் குறித்து குணசேகரன் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


ஜெய்ஹிந்த்புரத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்கள் பறிமுதல் ஒருவர் கைது.


ஜெய்ஹிந்த்புரத்தில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது மெயின் ரோட்டில் எண்ணைக் கடையில் பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருப்பதாக  சப் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது. 


இவர் திடீரென்று அந்த கடையில் சோதனை நடத்தினார். அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 26 பண்டல்களை பதிமுதல் செய்து செல்லூர் பாலம்ஸ்டேசன்  ரோட்டை சேர்ந்த ரமேஷ் 44 என்பவரை கைது செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad