மதுரை மத்திய சிறை எதிரே இளநீர் வியாபாரியை அறிவாளால் வெட்டிய மற்றொரு வியாபாரியை போலீசார் கைது செய்தனர். பொன்மேனி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பெரியசாமி 47. பொன்மேனி முதல் தெருவை சேர்ந்தவர் இருளேந்திரன் மகன் தெய்வேந்திரன் 30. இருவரும் மத்திய சிறைச்சாலை எதிரே இளநீர் கடை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு இளநீர் வியாபாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் தெய்வேந்திரன் ,பெரியசாமியை ஆபாசமாக பேசி அறிவாளால் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பெரியசாமி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தனர்.
மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 12 பேர் கைது, வெவ்வேறு சம்பவங்களில்.
மதுரையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தத்தனேரி கண்மாய் கரையை சேர்ந்தவர் மாரியப்பன் 48 .இவர் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அவரை ஆழ்வார் புரத்தை சேர்ந்த முத்துராமன் மகன் சதீஷ்குமாரும் 24 கத்திமுனையில் மிரட்டி ரூ 1300ஐ வழிப்பறிசெய்துவிட்டார்.இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
தத்தனேரி மேல கைலாசபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் 42 .இவர் ராஜா மெயின் ரோடு பாலம் சந்திப்பில் சென்றபோது கணேசபுரத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்ற வாலிபரும் அதே பாதியைச் சேர்ந்த சசிகுமார் மகன் அய்யனாரும் கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து ரூபாய் 1200ஐ வழிப்பறி செய்து விட்டனர் .இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, அய்யனாரைகைது செய்தனர்.
மதுரை காமராஜர் புரத்தை சேர்ந்தவன் முருகன் 36 .இவர் ரிசர்வ்லயன் அருகே சென்று கொண்டிருந்தார். அவரை முல்லை நகரை சேர்ந்த கருப்புசாமி என்ற கருப்பு 25, பி.பி. குளத்தைசேர்ந்த சதீஷ் என்ற குட்டி 23, முல்லை நகர் தினேஷ் 29 மூவரும் கத்தி முனையில் மிரட்டி ரூபாய் 2ஆயிரத்தை வழிபறி செய்துவிட்டனர். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர் .
புட்டுத்தோப்பு மெயின்ரோடு சன்னதி தெருவை சேர்ந்தவர் சரவணன் 51. இவர் அந்த பகுதியில் சென்ற போது அவரை வழிமறித்த கண்ணன் என்ற மண்ணெண்ணெய் கண்ணன் அவரிடமிருந்து ரூ 600ஐ வழிப்பறி செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
விபி சதக்கம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கண்ணன் 54. இவர் கிருஷ்ணராயர் தெப்பம் தெருவில் சென்றார். அவரை பேச்சியம்மன் படித்துரையைச் சேர்ந்த வாலிபர் விஜய் 25 வழிமறித்து அவரிடம் இருந்து ரூ200 ஐ வழிப்பறி செய்து விட்டார் .இந்த சம்பவம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர்.
திடீர் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் சேர்ந்தவர் பாண்டி மகன் பிரதீப் 29. இவர் பெரியார் பேருந்து நிலையம் அருகே சென்றபோது மேலவாசலைச் சேர்ந்த கருப்பையா என்ற போதகர் 31 என்ற வாலிபர் வழிப்பறிசெய்யமுயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜெய்ஹிந்துபுரம் சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் 45. இவர் ராமையாதெருவில் சென்று கொண்டிருந்தார் .அவரை டிவிஎஸ் நகர் சத்யசாய் நகரை சேர்ந்த விஜய் என்ற விஜி 32 ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு காளீஸ்வரன் என்ற ஆண்டவர் காளி 27 இருவரும் கத்தி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மதுரையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மொத்தம் 12 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கே புதூரில் இளம்பெண் குளிப்பதை திருட்டுத்தனமாக எட்டிப் பார்த்த வாலிபர் கைது.
கே புதூரில் இளம்பெண் குளிப்பதை திருட்டுத்தனமாக எட்டிப் பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர், கே புதூர் நாராயணன் செட்டி தெரு சேர்ந்தவர் தேவதாஸ் மகன் ரவிக்குமார். இவர் இளம்பெண் ஒருவர் குளிப்பதை திருட்டுத்தனமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதை அந்த பெண் பார்த்ததும் கூச்சல் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அந்த இளம் பெண் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் குளிப்பதை திருட்டுத்தனமாக எட்டிப் பார்த்த வாலிபர் ரவிக்குமாரை கைது செய்தனர்.
மதுரையில் போலீசார் அதிரடி வேட்டை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 18 பேர் கைது.
மதுரையில் போலீசார் திடீரென்று நடத்திய அதிரடி வேட்டையில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 18 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில் போலீசார் ஒரே நாளில் அதிரடியாக பல்வேறு இடங்களில் திடீர் சோதனைகள் ஈடுபட்டனர். அப்போது பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாள் மற்றும் துப்பாக்கி கஞ்சாவுடன் பதுங்கி இருந்த முனீஸ்வரன் என்ற காத்தாடி முனீஸ் 24, அருண் பாண்டியன் என்ற உருளை அருண் 32 , சரவணக்குமார் என்ற மட்டக்கம்பு சரவணன் மூவரையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் வைக்கம் பெரியார் நகர் ரோட்டில் சைவம் என்ற சிவா துரை 27 , சரவணன் என்ற வண்டுசரவணன் 25 ,கார்த்திக் என்ற புறா காரத்துக்கு 22 மூவரையும் கைது செய்து அவர்கள் அவர்களிடம் இருந்து மூன்று வாள்களையும் அவனியாபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாம்பன் நகர் மொட்டைமுணி அரசு கோவில் அருகே தெற்கு வாசல் போலீசார் நடத்திய சோதனையில் சரத் என்ற சரத்குமார் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அறிவால் மரக்கட்டை மிளகாய் பொடியையும் பறிமுதல் செய்தனர்.
கீரை துரை போலீசார் வாழைத்தோப்பு ரயில்வே கேட்டு அருகே செல்ல மணி என்ற கூனல் பாபா 25 என்பவரை கைது செய்தனர், தெப்பக்குளம் 16 கால் மண்டபம் அருகே தெப்பக்குளம் போலீசார் மாரி செல்வம் 27 என்பவரை கைது அவரிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் .நேற்று ஒரு நாள் மட்டும் போலீசார் நடத்தி அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கியுடன் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரத்தில் வாத நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
ஜெய்ஹிந்த்புரம் புலி பாண்டியன் வீதியை சேர்ந்தவர் குருசாமி 63 .இவர் வாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மணமுடைந்து விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் குருசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment