மதுரை அண்ணா நகர் வைகை காலனி, வைகை விநாயக ஆலயத்தில், புரட்டாசி பௌர்ணமி முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இத்திருக்கோவிலிலே, மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று மாலை இக்கோயில் அமைந்துள்ள, காமாட்சி அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து அர்ச்சனை வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம்.
இதே போன்று, பவுர்ணமி தினத்தன்று, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதே போல, மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சித்திவிநாயகர் ஆலயத்திலும், பௌர்ணமி அபிஷேகம் நடைபெற்றது.
No comments:
Post a Comment