அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது, பரவையில் தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் மருத்துவ முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 3 October 2022

அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகி விட்டது, பரவையில் தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் மருத்துவ முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி.

மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பரவையில் ஆர்.ஜே. தமிழ்மணி சாரிட்டபில்அன்டு எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.


இந்த முகாமை, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தொடங்கி வைத்தார், இதில், டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பரவை பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா, முன்னாள் மாநகராட்சி துணை மேயர் திரவியம் உள்ளிட்ட அதிமுக வனர் கலந்து கொண்டனர்.


பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது: தமிழகத்தில் திமுக அரசு அதிகாரிகளை சுயமாக செயல்பட விடுவதில்லை அதனாலேயே பல இடங்களில் நிர்வாக குளறுபடிகள் ஏற்படுகிறது.


மேலும், மதுரை மாநகராட்சியில் மேயரை நிதியமைச்சர் சுயமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாக புகார்கள் வருகின்றன. அதனாலேயே, மாநகராட்சியில் பல வேலைகள் செயல்படுத்த முடியாமல் இருக்கின்றது. முக்கியமாக வட கிழக்கு பருவமழை சில தினங்களில்தொடங்க இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்யாமல் இருப்பது பருவமழை தொடங்கிய பின்பு பொதுமக்கள் பல துன்பங்களை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கின்றது.


மேலும், தமிழக  அமைச்சர்களில் சிலர் வாய்க்கொழுப்பாக தற்போது பேசி வருவது முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழக முதல்வர், அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும்  தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை வரும்.


மேலும், பேருந்து பயணம் தற்போது ஒரு காட்சி பொருளாக மாறிவிட்டது மக்களை கேலியாக பேசும் அமைச்சர்களால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள், முன்னாள் தமிழக முதல்வர், அம்மா அவர்கள் ஆட்சி நடத்தும்போது அனைத்தையும் விலையில்லா என்று அறிவித்தார். அதாவது விலையில்லா மிதிவண்டி விலையில்லா மிக்ஸி கிரைண்டர் விலையில்லா மடிக்கணினி விலையில்லா பரிசு பெட்டகம் என்று அனைத்தையும் விலையில்லா என்று அறிவித்தார் தற்போது அரசு அதனை ஓசி என்று கூறி மக்களை அவமானப்படுத்துவது வேதனைக்குரியதாக உள்ளது.


இதற்கு வரும் காலங்களில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள், மேலும் நேற்று மதுரை வந்த கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறும் போது, கூட்டுறவு துறையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்தார். ராதாகிருஷ்ணன் முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆட்சியில் சுகாதார துறையில் மிக சிறப்பாக செயல்பட்டவர் அவரை கூட்டுறவுத் துறை போன்ற சாதாரண துறைக்கு மாற்றி  அவரின் திறமையை வீணடித்து வருகிறார்கள். இதுபோல் ஒவ்வொரு துறையிலும் தகுதியில்லா நபர்களை வைத்து அரசு நிர்வாகத்தை நடத்துவதால் அரசில் பெரிய அளவில் குழப்பங்கள் நிலவி வருவதாக தெரிவித்தார். 


இந்த முகாமில் கண் பரிசோதனை இரத்த பரிசோதனை பல் மருத்துவம் இருதய நோய்க்கான சிறப்பு மருத்துவம் போன்ற அனைத்திற்கும் தனித்தனியாக பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு  தேவையான அறுவை சிகிச்சை செய்யும் செலவுகளை ஆர்.ஜே. தமிழ்மணி சாரிட்டபிள் டிரஸ்ட் ஏற்றுக்கொள்வதாக   நிர்வாகிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad