முள்ளிபள்ளத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 30 September 2022

முள்ளிபள்ளத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலை யில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முள்ளி பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.


துணைத் தலைவர் ராஜா  வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், திமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்செயலாளர் பசும்பொன் மாறன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி மார்நாட்டான் ஒன்றியக் கவுன்சிலர்கள் கார்திகா ஞானசேகரன், ரேகாவீரபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் சோழவந்தான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி கவுன்சிலர் குருசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சந்தான லட்சுமி மற்றும் நிர்வாகிகள் வக்கீல் முருகன் ,மில்லர் ஓவியம் தவம், நீலமேகம், முள்ளை ரமேஷ் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad