ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 30 September 2022

ஜெனகை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத நவராத்திரி விழா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.


இதில், இன்று ஜெனகை மாரியம்மன் கோலாட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில், அம்மன் கோலாட்டம் ஆடு வது போல் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


அருகில்  சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நவராத்திரி கொலு பொம்மைகள் பல்வேறு வேடங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad