அப்போது அங்கு வந்த ரவி பிரபுவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர். அதன் பின் இரவு 9 மணிக்கு பிரபு தனது நண்பர்கள் சுப்பையா,முத்துப்பாண்டி, கருப்பையா ஆகியோருடன் வந்து ரவியின் வீட்டின் முன்பாக நின்று கொண்டு சத்தம் போடேவேஅது கேட்டு வெளியே வந்த ரவியின் தலையில் பிரபு உருட்டு கட்டையால் அடித்துள்ளார். அப்போது முத்துப்பாண்டி, கருப்பையா இருவரும் பாட்டிலை உடைத்து ரவியை குத்தினர்.
இதில் ரத்தம் போல போல என்று கொட்ட தொடங்கியது. இதில் உருட்டு கட்டையால் சுப்பையா சிந்தாயி பாட்டியை தாங்கியுள்ளார். ஐயோ அம்மா என்ற சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே பிரபு மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனே ரவியை சிக்ச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.இது சம்பந்தமாக சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர்வழக்கு பதிவு செய்து பிரபு, முத்துப்பாண்டி, சுப்பையா ஆகியோர் கைது செய்து கருப்பையாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
.
No comments:
Post a Comment