மதுரையில் கனமழையினால் திருப்பரங்குன்றத்தில் குடையுடன் கிரிவலம் சுற்றும் பக்தர்கள் - சுவாமி தரிசனம் செய்ய குடையுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று கார்த்திகை மகாதீபம், பௌர்ணமியை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம் இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான உயிரழத்த காற்றழுத்த தாழ்வினால் கடந்த இரண்டு நாட்களாக மதுரை மாவட்டம் மட்டுமல்லாது புறநகர் பகுதிகள் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று காலை கார்த்திகை மாதத்தில் நடைபெறும் சிகர நிகழ்ச்சியான வைர தேர் இழுத்து நடைபெறும் வழிபாடு இன்று காலை கன மழையினால் ரத்து செய்யப்பட்டதாக திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து பௌர்ணமியை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் வருகை தந்த பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வரும் நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் அதிக கன மழை பெய்து வருவதால் குடையுடன் பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருகின்றனர்.
இன்று கார்த்திகை மாதத்தில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால் அதிகளவு பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சாமி பக்தர்கள் அதிகளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ளே சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருவதால் கோவில் வாசலிலே குடையுடன் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலானது ஏற்பட்டுள்ளது.
மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடையுடன் கிரிவலம் மேற்கொள்வதும் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனத்திற்கு காத்திருககும் நிலை உருவாகியுள்ளது.
No comments:
Post a Comment