மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்பள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா மேடை மாடு பிடி வீரர்களுக்கான காலரி தடுப்பு வேலி மையம் குடிநீர் வசதி உள்ளிட்ட வைத்து 43 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும் ,சாலை சீரமைப்பு பணிகளுக்கு 7 லட்சத்து 34 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் தை மாதம் முதல் நாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் விழா நடைபெறும்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை மாநகராட்சி மண்டலம் எண் 5 வார்டு எண் 92 ,100 பகுதிகளில் மெயின் ரோடு வெள்ளக்கல், கல்குளம் சாலை, மற்றும் செம்பூரணி மெயின் ரோட்டில் 2025 ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக பேட்ச் ஒர்க் சாலை சீரமைத்தல் மற்றும் இதர பணிகளுக்காக மதுரை மாநகராட்சி சார்பில் 7 லட்சத்து 39 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது.
அதேபோல் மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 92 ,100 இல் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு திருவிழா 20 25 நடத்துவதற்கு விழா மேடைகள் தடுப்பு வேலிகள் அமைக்கவும் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைப்பது தொடர்பாக ரூபாய் 43 லட்சம் 79 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்த பள்ளி இன்று வெளியிடப்பட்டது.
மதுரை மாநகராட்சி ஜல்லிக்கட்டு தொடர்பான ஒப்பந்த பள்ளி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதி மாலை நான்கு மணி அளவில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment