மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புரட்சித் தமிழர் எடப்பாடியார் எடுத்து வைத்த வாதங்களை எதிர்கொள்ள முடியாமல் திக்கித் திணறி சின்னாபின்னமாகி போன ஆளுங்கட்சி முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோட்டில் பேசியதை மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? காலி தகர டப்பா எழுப்புகிற ஓசை தமிழ்நாட்டிலே எந்த பலனையும் தராது என்று கூறுகிறார்கள்.
திமுக பகல் கனவு காண வேண்டாம் ஐந்து ஆண்டு காலம் விபத்தில் ஆட்சியில் இருந்தால் இனி ஐந்தாண்டு காலமோ? பத்தாண்டு காலமோ? வனவாசம் காத்துக் கொண்டிருக்கிறது.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலின் மீது கடும் தாக்கு
கழக செயற்குழு, பொதுக்குழுவில் கழக பொதுச் எடப்பாடியார் ஆற்றிய வரலாற்று பேரூரையின்
சிறப்புகளையும், நிறைவேற்ற பட்ட முத்து முத்தான 16 தீர்மானங்களையும், ஒவ்வொரு வாக்காளர்களிடத்தில் எடுத்துச் சென்று விடவும்,ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பு குறித்தும், மதுரை மேற்கு புறநகர் மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கள்ளிக்குடியில் நடைபெற்றது இதற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வேப்பங்குளம் கண்ணன், ராமையா, பிரபுசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன்,கருப்பையா,மாநில நிர்வாகிகள் டாக்டர் விஜயபாண்டியன் வெற்றிவேல், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கள்ளிக்குடி பகுதியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் தொடர்ந்து வருகிற புத்தாண்டுக்கு கழக நிர்வாகிகளுக்கு கழக வேட்டியினை வழங்கினார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றியதாவது.
மு க ஸ்டாலின் ஈரோட்டில் போய் பேசி இருக்கிறார் காலி பாத்திரம் உருளும் போது சத்தம் கேட்கும் எனக் கூறியுள்ளார் ஏன் அதை சொல்லி இருக்கிறார் என தெரியுமா இரண்டு நாள் தான் சட்டமன்றம் நடந்தது இரண்டு நாட்களில் எடப்பாடியார் எடுத்து வைத்த வாதங்களில் அர்ஜுனன் விடுகின்ற வில்லிருந்து அம்பு போல ஆளுங்கட்சியை தொலைத்து எடுக்கின்ற காரணத்தினால் அதிலிருந்து அவர்களால் மீண்டு வர முடியவில்லை டங்ஸ்டன் பிரச்சனை முல்லை பெரியார் பிரச்சனை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் புரட்சித்தலைவர் எடப்பாடியார் எடுத்து வைத்த வாதங்களில் எதிர்கொள்ள முடியாமல் திக்கி திணறி சின்ன பிண்ணமாகி போன ஆளுங்கட்சி முதலமைச்சரான முத்துவேல் கருணாநிதி அரசு விழாவில் அரசு செலவில் மேடை அமைத்து எதிர்க்கட்சித் தலைவரை வசை பாடுகிறார் என்று சொன்னால் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைக்கின்ற வாதங்களை முதலமைச்சரால் பதில் சொல்ல முடியவில்லை தமிழ்நாட்டு மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்ற செய்தி உளவுத்துறை மூலமாக இன்று ஸ்டாலின் அவர்களுக்கு சென்றுள்ளது எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் காலி பாத்திரம் உருள்கின்றபோது கீச் கீச் என்று குரல் கேட்கிறது என்று சொல்கிறீர்கள் நேற்று நீங்கள் ஈரோட்டில் பேசியதை மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா காலி தகர டப்பா எழுப்புகிற ஓசை தமிழ்நாட்டிலே எந்த பலனையும் தராது என்று கூறுகிறார்கள் நீங்கள் என்ன அவதூறு பரப்பினாலும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட முடியாது உங்கள் முதுகில் பொய் அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொண்டு எங்கள் எடப்பாடியாரை சேற்றை வாரி அவதூறு பரப்ப முயற்சித்தால் தாய் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பு அரணாக எடப்பாடியார் மீது நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
திமுக முடிந்து போன வரலாறு அவர்கள் 234 தொகுதி எனக் கூறுகிறார்கள் 2006 இல் இருந்து 2011 வரை கூறினார்கள் ஆனால் மக்கள் தீர்ப்பு அம்மா முதலமைச்சரானார்கள் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது இதுதான் வரலாறு.
திமுக எப்போது ஆளுங்கட்சியாக இருந்தால் அடுத்த ஐந்தாண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் அது மக்கள் அளிக்கின்ற தீர்ப்பு முத்துவேல் கருணாநிதி அவர்களே நீங்கள் பகல் கனவு காண வேண்டாம் நீங்கள் இந்த ஐந்தாண்டு காலம் நூழிலையில் இன்று விபத்தில் ஆட்சி அதிகாரத்தில் வந்து விட்டீர்கள் இனி ஐந்து ஆண்டுகாலமோ பத்தாண்டு காலமோ வனவாசம் காத்துக் கொண்டிருக்கிறது தீர்ப்பை அதிமுக தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்கள் எழுதி இருக்கிறார்கள் முதலமைச்சர் எடப்பாடியார் வரவேண்டும் என களத்தில் இறங்கி விட்டார்கள் என சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment