திருப்பரங்குன்றத்தில் இந்து. முன்னணி சார்பில் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி தற்போது முக்கிய வீதிகளில் ஜோதி ஏந்தி ஊர்வலம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 10 December 2024

திருப்பரங்குன்றத்தில் இந்து. முன்னணி சார்பில் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி தற்போது முக்கிய வீதிகளில் ஜோதி ஏந்தி ஊர்வலம்


திருப்பரங்குன்றத்தில் இந்து. முன்னணி சார்பில் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி தற்போது முக்கிய வீதிகளில் ஜோதி ஏந்தி ஊர்வலம் செல்கிறது.


திருப்பரங்குன்றம் மலை மேல் தடையை மீறி தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது.


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் - மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு.


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி 16 கால் மண்டபம்  அருகே இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர், மாநில செயலாளர் முத்துக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் பொது கூட்டம் மற்றும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.


இந்து முன்னணி சார்பில் நடைபெறும் பொது கூட்டத்தில் முடிவில் கடைசிவர சுப்ரமணியன் தலைமையில் இந்து முன்னணியினர் தீபம் ஏற்ற செல்கின்றனர்.


திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது இந்து முன்னணியினர் அனுமதி இல்லாமல் மலை மேல்  செல்வதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர்.


ஊர்வலத்தில் காவடி, முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் சுற்றி வந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.


திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியின்றி செல்ல இருப்பதாக தகவலைத் தொடர்ந்து,மதுரை மாநகர காவல் துணை  ஆணையர் கருண் காரத் தலைமையில்   500 க்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்..

No comments:

Post a Comment

Post Top Ad