தை பிறந்தால் வழி பிறக்கும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் வருவார் அப்போது தமிழ்நாட்டுக்கு வழி பிறக்கும் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 18 December 2024

தை பிறந்தால் வழி பிறக்கும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் வருவார் அப்போது தமிழ்நாட்டுக்கு வழி பிறக்கும்


தை பிறந்தால் வழி பிறக்கும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் வருவார் அப்போது தமிழ்நாட்டுக்கு வழி பிறக்கும்


கருணாநிதி பெயரில் உள்ள ஜல்லிகட்டு மைதானத்திற்கு கூட கரண்ட் பில்லை கட்ட முடியாத யோகிதை இல்லாத அரசாக இருக்கும் திமுக அரசு எப்படி மக்களை காப்பாற்றும்.


சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு


மதுரை கழக செயற்குழு, பொதுக்குழுவில் கழக பொதுச் எடப்பாடியார் ஆற்றிய வரலாற்று பேரூரையின்
சிறப்புகளையும், நிறைவேற்ற பட்ட முத்து முத்தான 16 தீர்மானங்களையும், ஒவ்வொரு வாக்காளர்களிடத்தில் எடுத்துச் சென்று விடவும்,ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பு குறித்தும், மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்குத் (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்  சமயநல்லூரில் நடைபெற்றது இதற்கு ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.


மாவட்ட நிர்வாகிகள் சி.முருகன், கே. திருப்பதி, தமிழ்செல்வன், பஞ்சவர்ணம், உஷா, பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராஜ் ,சுதாகரன், டாக்டர் பாவடியான், சுமதி ,மாவட்ட அணி நிர்வாகிகள் பால்பாண்டி, காசிமாயன், லட்சுமி, மகேந்திர பாண்டி, பாஸ்கரன், துரைப்பாண்டி, ஜஹாங்கீர்,ராம்குமார் ,சரவண பாண்டி, சந்திரன், செல்லம்பட்டி ரகு, ராமகிருஷ்ணன்,ஆர்யா, சிங்கராஜா பாண்டியன், சதீஷ் சண்முகம், சிவசக்தி மற்றும் லதா ஜெகன், வளர்மதி அன்பழகன், மீனாட்சி மகாலிங்கம் ,கலையரசி கண்ணன், சண்முகப்பிரியா, முனியம்மாள், மகாலட்சுமி, கவிதா ராஜா ,ராஜா,அன்ன முத்து, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் கே தமிழரசன், ஐ தமிழழகன், எஸ்  எஸ்.சரவணன ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.


மற்றும் கழக அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன், தேனி வி.டி. நாராயணசாமி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், நீதிபதி, தவசி, கருப்பையா ,ஏகேடி ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் ஜெயராமன், சந்திரசேகரன், ராமகிருஷ்ணன், அன்னபூர்ணா தங்கராஜ், மாணிக்கம், இளங்கோவன், ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், தனராஜ், ஏகேபி சிவசுப்பிரமணியன், ராஜசேகர், ஜான் மகேந்திரன் ,முத்துச்செல்வம், விஜய் பாண்டியன், இளஞ்செழியன்
மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், கண்ணன், ராமையா, செல்லம்பட்டி ராஜா, பிச்சை ராஜன், ராமசாமி,பிரபபுசங்கர், அன்பழகன் ராமையா, நகர செயலாளர்கள் விஜயன் பூமா,விஜயன், பேரூர் கழகச் செயலாளர்கள் முருகேசன், நெடுமாறன், பாலசுப்பிரமணி, வாசிமலை, அசோக் குமார் ,அழகு ராஜ்குமார்,குமார்,உசிவை தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.


ஆர்.பி உதயகுமார் பேசியதாவது


ஜனவரி மாதம்  234 தொகுதிகளும், கழகப் எடப்பாடியார் வருகிறார், எடப்பாடியார் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு வருகை தரும்பொழுது இந்திய திருநாடே திரும்பிப் பார்க்கும் வகையில் அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.


தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல, தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் அப்போது திமுக ஆட்சியில் இன்னல்களை அனுபவித்து வரும் மக்களுக்கு வழி பிறக்கும்.


அதேபோல் இளைஞர் பாசறையில், இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க படிவம் கொடுக்கப்பட்டுள்ளது இதில் உங்கள் பகுதியில் இளைஞர்களை உறுப்பினராக சேர்த்து விட வேண்டும்.


குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணியை நாம் வழங்கி உள்ளோம் இப்போது அவர்கள் இளைஞராக இருப்பார்கள் அவர்களை நாம் கழகத்தில் சேர்த்தால் வலிமையாக இருக்கும்.


மகாபாரத  போர்க்களத்தில் அர்ஜுனன் போல ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் 9 பேர் கொண்ட  புதிய கிளைகளை புடம் போட்ட தங்கம் போல் இளைஞர்களை தேர்வு செய்ய வேண்டும் .


அதேபோல் ஒவ்வொரு கிராமங்களில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் பிறந்த நாளை முன்னிட்டு சுவர் விளம்பரம் செய்திட வேண்டும்.


சட்டமன்றத்தில் எடப்பாடியார் முல்லை பெரியார் அணை குறித்து கேள்வி எழுப்பினார் அதில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசு புதிதாக அனுமதியை கேட்கிறது இதன் மூலம் நமது உரிமை பறிபோகிறது இதை தெளிவுபடுத்த வேண்டும்.வைக்கம் செல்லும் முதலமைச்சர் முல்லை பெரியார் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புவாரா என்று கேட்டார் ?அதற்கு இன்று வரை பதில் இல்லை.


கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 தேர்தல் வாக்குறுதி கொடுத்து, எதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி விட்டனர்  ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசல் வழியாக நடைபெறும் ஆனால் அலங்காநல்லூர் பகுதியில் புதிதாக ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து, அதற்கு கருணாநிதி பெயரை சூட்டினார்கள் ஆனால் அந்த மைதானத்தில் எந்த பயனும் இல்லை, அந்த ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கூட 8.66 லட்சம் மின் கட்டணம் பாக்கி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad