மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், பகுதியில் மத்திய மந்திரி அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை கேலி செய்யும் விதமாகவும்,அவமதித்து பேசியதைக் கண்டித்து மதுரையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதன் அடிப்படையில் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் திருமங்கலத்தில் ராஜாஜி சிலை முன்பு கோஷங்கள் எழப்பியும் பதவி விலக கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், திருமங்கலம் நகர செயலாளர் மூ.சி.சோ.ஸ்ரீதர், நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல், தெற்கு ஒன்றிய செயலாளர்கள் மதன் குமார், ஆலம்பட்டி சண்முகம், ராமமூர்த்தி, தனபாண்டியன்,நகர பொருளாளர் சின்னசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமங்கலம் திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்தியாளர் திருமங்கலம்
வினோத் பாபு
No comments:
Post a Comment