திமுக வெற்றி பெற்றால் அதன் பலன் மக்களுக்கு சேராது தொண்டர்களுக்கு சேராது கருணாநிதியின் குடும்பத்திற்கு மட்டும்தான் சேரும் அதிமுக வெற்றி பெற்றால் வெற்றியின் பலன் அதிமுக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தான் போய் சேரும்
அதிமுகவில் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இன்று அதிமுகவை அளிக்க நினைக்கிறார்கள் ஆனால் அம்மாவின் ஆன்மாவும் புரட்சித்தலைவர் ஆன்மா இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு
கழக செயற்குழு, பொதுக்குழுவில் கழக பொதுச் எடப்பாடியார் ஆற்றிய வரலாற்று பேரூரையின்
சிறப்புகளையும், நிறைவேற்ற பட்ட முத்து முத்தான 16 தீர்மானங்களையும், ஒவ்வொரு வாக்காளர்களிடத்தில் எடுத்துச் சென்று விடவும்,ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பு குறித்தும், மதுரை மேற்கு புறநகர் மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் பேரையூரில் நடைபெற்றது முன்னதாக டி.குன்னத்தூரில் அமைந்துள்ள அம்மா கோவிலில் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி திருவுருவ வெங்கல சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு நிர்வாகிகளுக்கு வேஷ்டிகள் வழங்கினார்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது
திமுக வெற்றி பெற்றது என்றால் அந்த முழு பலன்களும் மக்களுக்கு போய் சேராது தொண்டர்களுக்கும் சேராது நிர்வாகிகளுக்கும் சேராது கருணாநிதி குடும்பத்திற்கு தான் திமுக வெற்றி சேரும் ஸ்டாலின் குடும்பத்திற்குத் தான் சேரும்
அதிமுகவின் வெற்றி புரட்சித்தலைவர் பெற்றுத் தந்த வெற்றி அம்மா பெற்றுத்தந்த வெற்றி புரட்சித்தமிழர் பெற்று தந்த வெற்றி இனிமேல் பெறப்போகும் வெற்றி அது அதிமுக தொண்டனின் வெற்றி தமிழ்நாட்டு மக்களின் வெற்றி
புரட்சித் தமிழர் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் தவம் இருக்கிறார்கள் என்று சொன்னால் வெற்றிக்குரிய பலன் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும் அந்த வெற்றியின் பலன் எல்லோருக்கும் பலன் கிடைக்கும் அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் சொல்கிறார்கள் மீண்டும் தமிழகத்தை ஆளுகின்ற தகுதி எடப்பாடியாருக்கே சாரும்
அதிமுகவினால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்களே இது நியாயமா என ஒவ்வொரு தொண்டனும் கேட்கும்போது அம்மாவின் ஆன்மா புரட்சித் தலைவர் ஆன்மா உயிர் இருக்கும் வரை எதுவும் நடக்காது
அம்மாவின் உயிர் உள்ள ஆன்மா வளர்த்த தாயை இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்கள் சில பேர் அவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டாம் அம்மாவின் ஆன்மா புரட்சித்தலைவர் ஆன்மா அவர்களுக்கு பாடம் புகட்டும் என சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment