மதுரை விடிய விடிய பெய்த பரவலான மழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்து தாழ்வு பகுதியாக உருவெடுத்த நிலையில் தென் மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை மாவட்டம் முழுவதிலும் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பரவலான மழை பெய்த நிலையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் உள்ள வி கே பி நகர், எல்லிஸ்நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் கடும் சிரமம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
மதுரை எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் மீனாட்சியம்மன் கோவில் வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரக்கூடிய பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்த நிலையில் ஒவ்வொரு மழைக்கும் எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பக்தர்களும் சிரமத்திற்கு ஆளாவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment