மதுரை தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்களின் கூட்டமைப்பில் (FOMTA) கலந்துள்ள நாம் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைத்து உருவாக்கிய GST கவுன்சிலின் தீர்மானப்படி 10.10.2024 முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் GST வரி RCM முறையில் விதித்து அதை கட்ட அறிவித்துள்ளார்கள். இதனால் சிறு வணிகர்கள் ஆண்டுக்கு ரூபாய் 1.5 கோடி வரை விற்று வரவு இருந்து Compounding- உள்ள வணிகர்கள் தயாரிப்பாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகளும் எதிர்க்கவில்லை
வணிகர்கள் இந்த பாதிப்பை சரி செய்ய GST கவுன்சில் தீர்மானத்தை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக 29.11.2024 வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் கடையடைப்பு செய்யமுடிவு செய்யப்பட்டது. இதற்கு எல்லா வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம.
No comments:
Post a Comment