தமிழ்நாடு முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சி கலைஞர்கள் நலச்சங்கம் & ஒருங்கிணைந்த கூட்டமைப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 23 November 2024

தமிழ்நாடு முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சி கலைஞர்கள் நலச்சங்கம் & ஒருங்கிணைந்த கூட்டமைப்பு

 


தமிழ்நாடு முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சி கலைஞர்கள் நலச்சங்கம் & ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சீனு  ஏற்பாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவன தலைவர்   த.வெள்ளையன் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட தலைவர் K.ராஜபாண்டியன் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர் E.மணிகண்டபிரபு M.A., மதுரை மாவட்ட தெற்கு பகுதி தலைவர் பெரீஸ் P.ரவி மற்றும் மதுரை மாவட்ட தெற்கு பகுதி செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோரின் முன்னிலையில் மதுரை விளாங்குடியில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி மற்றும் மேஜிக் ஷோ விழிப்புணர்வு நடத்தியும் மாணவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளும் செய்தனர். அதன்பின் மதுரை மாவட்ட தலைவர் K.ராஜபாண்டியன் அவர்கள் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு  மட்டன் பிரியாணி,முட்டை,சிக்கன் 65 ஆகிய உணவுகளை வழங்கி துவக்கிவைத்து விழாவினை சிறப்பித்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மதுரை மாவட்ட நிர்வாகிகளும் மற்றும் தமிழ்நாடு முத்தமிழ் மேடை கலைநிகழ்ச்சி கலைஞர்கள் நலச்சங்கம் & ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் நிர்வாகிகளும் இணைந்து பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad