அந்தியோதயா ரயில் இன்ஜினியர் கோளாறு காரணமாக மதுரை திருமங்கலத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமம்.
சென்னை தாம்பரத்திலிருந்து நேற்று இரவு நாகர்கோவில் நோக்கி செல்லும் அதி வேக ரயிலான அந்தியோதயா ரயில் மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டு சென்றது. ரயில் திருமங்கலம் அருகே வந்தபோது இன்ஜினியிலிருந்து புகை வந்ததால் ஓட்டுநர் கீழே இறங்கி பார்த்தார் பார்த்தவுடன் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். திருமங்கலம் ரயில் நிலையத்தில் இஞ்சின் பழுதடைந்ததால் சுமார் 5 மணி நேரம் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது இதனால் பயணிகள் அனைவரும் சரியான நேரத்திற்கு வெளியூர் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்த போலீசார் திருச்சியில் இருந்து குருவாயூர் நோக்கி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் பயணிகளை உடனடியாக மாற்றி அமைத்து அவர்களை பத்திரமாக அவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தனர் இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்புடன் காணப்பட்டது. மீண்டும் மீண்டும் அந்தியோதயா ரயில் ஆனது ஐந்து மணி நேரம் கழித்து மாற்று இஞ்சின் வரவழைத்து நாகர்கோவிலுக்கு சென்றது அதுவரை இரண்டாவது ட்ராக்கில் எந்த ரயிலும் வரவில்லை அதற்கு பதிலாக மூன்றாவது ட்ராக்கில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment