திருமங்கலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு சர்வேயர் கணவருடன் கைது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவை அலுவலகத்தில் மேலைக் கோட்டை,கண்டு குளம்,சாத்தங்குடி, கொக்குளம்,ஆகிய கிராமங்களில் சர்வேயராக சித்ராதேவி பணியாற்றி வருகிறார்.இவர் திருப்பரங்குன்றம் ஊரை சார்ந்தவர்.இவரது கணவர் கணேசன் நிலங்கள் அளக்க கூடவே செல்வார் இன்று நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்த போதுகீழ உரப்பனூரை சேர்ந்த அஜித் குமாரிடம் சித்ராதேவி ரூ ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். உடனே அஜித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் கூறினார் தகவல் அறிந்து வந்த போலீசார் ரசாயன பொடி கலந்த ஐந்தாயிரம் ரூபாயை அஜித் குமாரிடம் கொடுத்துஅனுப்பி கணேசனிடம் கொடுத்தார் அங்கே மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் கணேசனை உடனடியாக மடக்கி பிடித்தனர் அதே நேரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி சித்ரா தேவியை அலுவலகத்தில் வைத்து அவரையும் கைது செய்தனர். கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment