மதுரையிலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் முன்பக்க கண்ணாடி சேதம்.
விமானிகள் ஆய்வுக்குப்பின் பெரும் விபத்து தவிர்ப்பு.
துபாயிலிருந்து காலை 10: .50 மணியளவில் ஸ்பைசெட் விமானம் மதுரை வந்தடைந்தது விமானத்தில் 134 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
மதுரையிலிருந்து துபாய்க்கு பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு செல்ல 146 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் விமானத்தை இயக்க தயார் நிலையில் இருந்த விமானிகள் ஆய்வு செய்த போது விமானிகள் அறை முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது தெரியவந்தது
இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக விமானிகள் விமானத்தில் இருந்த பயணிகளை அவசரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கினர் மேலும் இதுகுறித்து சுவைசேட் நிறுவன அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர் அதனை அடுத்து விமானத்தின் முன்பக்க கண்ணாடி வேறு மாற்றுவதற்காக ஏற்பாடு செய்து பயணிகள் அனைவரும் நாளை செல்வதற்கு ஏற்பாடு செய்த ஒரு சில பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்து சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர்.
மதுரையிலிருந்து -துபாய் செல்லும் விமானத்தில் கண்ணாடி சேதமடைந்து விமானிகள் உரிய நேரத்தில் கண்டுபிடிப்பால் விபத்து தடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment