தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்- முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 16 October 2024

தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்- முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி


தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார்- முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி.


நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் இருக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தியது, ஆனால், தமிழக அரசு ஆலோசனை கூட்டங்கள் மட்டும் நடத்தி எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை,

பேரிடர் காலங்களில் அரசு மீது குற்றம் சொல்ல கூடாது எனும் நாகரீகம் எங்களுக்கு தெரியும், புயலை அரிவிப்போடு நிறுத்தி விட முடியாது, அதனை எதிர்க் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சென்னை அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளது, புயல், வெள்ளத்தை அறிவியல் பூர்வமாக எதிர்க் கொள்ள முடியும், மழை, வெள்ளத்தை எதிர்க் கொள்ள ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் அறிக்கை என்ன ஆனது தெரியவில்லை,

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் 4,399 மழை பாதிக்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது,

அரசின் மீது நம்பிக்கை இழந்ததால் வாகனங்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்படுகிறது,

திமுக அரசு வெற்று அறிக்கையை வைத்து மக்களை எப்படி காப்பற்ற போகிறது, மழை காலங்களில் அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் என மக்கள் நம்புகிறார்கள், மக்களின் நம்பிக்கை பொய்த்து போகும் விதமாக தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளது,

தமிழக அரசை ஆளுநர் பாராட்டவில்லை, தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார், மழை பாதிப்பை தமிழக அரசு எதிர்க் கொள்ளும் என்கிற நம்பிக்கை உள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார், தமிழக அரசின் மீது ஆளுநர் வைத்த நம்பிக்கை பொய்த்து போக கூட வாய்ப்புள்ளது,

புயலை தடுக்க முடியாது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை காப்பற்ற முடியும் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad