பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் "மனிதநேய தீபாவளி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 31 October 2024

பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் "மனிதநேய தீபாவளி


 பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் "மனிதநேய தீபாவளி


சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவோம். நாம்சந்தோசமா கொண்டாடுவதை விட மற்றவர்கள் கொண்டாடும் சந்தோசத்தை பார்ப்பது சந்தோஷம். ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நகைச்சுவை நடிகர் மதுரை முத்து*


அசத்தப்போவது யார் மற்றும் குக் வித் கோமாளி போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் மதுரை முத்து .


இவர் மதுரை தனக்கன்குளம் அருகே உள்ள பர்மா காலணியில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இந்த வருடம் தனது 100வது வெளிநாட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து கடந்த சில தினங்கள் முன் மதுரை திரும்பினார்.


இந்நிலையில் தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதரவற்ற .குழந்தைகள், விதவைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளியவர்களுக்கு ,தன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்.


அந்த வகையில் கிட்டத்தட்ட லண்டன் பிரான்ஸ் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு பயணம் செய்து நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் மேடைப் பேச்சுகள், ஸ்டாண்ட் அப் காமெடி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற  மதுரை முத்து கடந்த வாரம் ஜெர்மனி சென்றதுடன் 100 நூறாவது நாடாக பயணத்தை முடித்துள்ளதையொட்டி, மேலும்  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் மதுரை தனக்கன்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் பண்டிகை காலங்களில் கொண்டாட்டம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்களை இழந்து வாடும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கணவனை இழந்து தவிக்கும் விதவைகள் முதியவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


இதில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், வெடிகள், இனிப்புகள் வழங்கினார்.


மேலும் விதவைகள், முதியோர்களுக்கு சேலை, இனிப்பு, வெடிகள் வழங்கி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


சமூகத்தின் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் பண்டிகை காலங்களில் ஆதரவற்றவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு செய்யும் நலத்திட்ட உதவிகள் மூலம் வரவேற்பு பெறுகின்றனர்.


அந்த வகையில் மதுரை முத்துவின் இந்த மனித நேய செயல் மக்களின் கவனத்தை பெறுகிறது.


சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தில் சிரமப்படபவர்களுக்கு கொடுத்து உதவுவோம் .நாம் கொண்டாடி சந்தோஷப்படுவதை காட்டிலும் நம்மைச் சுற்றியுள்ள நலிவுற்றவர்கள் சந்தோஷத்தை கொண்டாடுவதை பார்த்து சந்தோஷம் அடைவோம் என மனிதநேயத்துடன் மதுரை முத்து கூறியது நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad