மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 27 October 2024

மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



வெள்ளையனை எதிர்த்து போரிட்ட சிவகங்கை சீமை மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 223 வது குருபூஜை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள ஓ ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் பி ஐயப்பன் தலைமையில் ஆலங்குளத்தில் உள்ள மாமன்னர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் மாவட்ட பொருளாளர் மு .சி .சோ. ரவி திருமங்கலம் நகர் கழக செயலாளர் ராஜாமணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad