அலங்காநல்லூர் அருகே தனியார் பனியன் கம்பெனி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலைபோலீஸ்சார் விசாரணை.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தும்பிச்சம்பட்டி, கட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் வாடிப்பட்டி ஜவுளி பூங்காவில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கடந்த ஐந்து வருடமாக பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தினமும் அலங்காநல்லூரில் இருந்து வாடிப்பட்டிக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு வரும் ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று வருவது வழக்கம். நேற்று மாலை வேலை முடிந்து கம்பெனியில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு அலங்காநல்லூர் வந்து இறக்கிவிட்டு கேட்டுகடையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பாக பஸ்ஸை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் இன்று காலை வழக்கம் போல் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றி கொண்டு செல்ல பஸ்ஸை இயக்க வந்தவர் பஸ்ஸின் பின்புறமாக உள்ள படிக்கட்டு கம்பியில் கொச்சை கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் சந்தேகம் அடைந்த நிர்வாகிகள் அலங்காநல்லூர் வந்து பார்த்தபோது பேருந்தின் கதவு மூடப்பட்டு இருந்தது. பின்னால் சென்று பார்த்த போது டிரைவர் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அலங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதேசத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பனியன் கம்பெனி டிரைவர் தான் பணிபுரியும் பஸ்ஸிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment