மதுரை தனக்கன்குளம் பகுதியில் விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்கள் கைது- போலீசார் விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 8 October 2024

மதுரை தனக்கன்குளம் பகுதியில் விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்கள் கைது- போலீசார் விசாரணை.

 


மதுரை தனக்கன்குளம் பகுதியில் விற்பனைக்காக 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்கள் கைது- போலீசார் விசாரணை.


மதுரை திருநகர் காவல் சார்பு ஆய்வாளர் குமாரி தலைமையில் மூன்று காவலர்கள் தனங்கள் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தனக்கன்குளம் தேசிய நெடுஞ்சாலை அருகே போதைப் பொருள் கடத்தி வருவதாக திருநகர் போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து சந்தேகத்திற்குக்உரிய வகைகள் நின்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தத்தில் அந்த மூவரும் திருப்பரங்குன்றம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சசிகுமார் மகன் விக்னேஸ்வரன் (வயது 21) பரமக்குடி எமனேஸ்வரம் வைகை நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகள் கரன் மற்றும் (வயச 22) திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் ரோடு ராஜாக்காபட்டி வடக்கு தெருவை சேர்ந்த அழகு முருகன் மகன் கார்த்திகேயன் (வயது 20) என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் மூவரும் தேனி மாவட்டம் போடிமெட்டு அருகே உள்ள பகுதியிலிருந்து 1.5 கிலோ கஞ்சாவை வாங்கி அதை சிறிய பொட்டலங்களாக பிரித்து திருநகர், ஹார்விப்பட்டி, தனக்கன்குளம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அந்த மூவரையும் கைது செய்த திருநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad