கேரளா அரசியல்வாதிகள் அணைக்கு கீழே, புதிய அணை கட்ட முயன்று வருகிறார்கள் இதுகுறித்து விவசாயிகள் கடுமையான போராட்டம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 7 September 2024

கேரளா அரசியல்வாதிகள் அணைக்கு கீழே, புதிய அணை கட்ட முயன்று வருகிறார்கள் இதுகுறித்து விவசாயிகள் கடுமையான போராட்டம்

 கேரளா அரசியல்வாதிகள் அணைக்கு கீழே, புதிய அணை கட்ட முயன்று வருகிறார்கள் இதுகுறித்து விவசாயிகள் கடுமையான போராட்டம் நடத்துகிறார்கள்.மீண்டும் அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேரளா நெருக்கடி கொடுக்கிறது


இது தொடர்பாக தமிழ்நாடு ,கேரளா இரண்டு மாநில அதிகாரிகள் பங்கேற்ற டெல்லியில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில், கேரளாவில் சமீபத்தில் மழை, நிலச்சரிவு போன்ற பாதிப்புகளை ஆதாரம் இன்றி சொல்லி உள்ளார்கள், இரு தரப்பு வாதத்தையும் கேட்ட மத்திய நீர் வளத்துறை ஆணையம் அணை குறித்து விரிவான ஆய்வை 12 மாதத்தில் வழங்கப்படும் என்று ஒப்புதல் கூறியுள்ளது.

ஏற்கனவே பலகட்ட ஆய்வில் வல்லுனர் குழு அனைவரும் அணை பலமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது, இப்போது நீர்வளத்துறை ஆணையம் அறிவித்திருப்பது ஜீவாதார உரிமையை பறிக்கும் அபாயம், அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து முல்லை பெரியார் குறித்து எடப்பாடியார், தூங்கி வழிந்து வரும் விடியா திமுக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகிறார் தற்பொழுது புதிய அணை குறித்து மற்றும் பல்வேறு வதந்திகளை கேரளா அரசு பரப்பி வருகிறது .ஆனால் தமிழக முதலமைச்சரும், தமிழக அரசும் வாய் மூடி மௌனியாக இருக்கிறது.

முல்லை பெரியார் உரிமையை நிலைநாட்டவும், பாதுகாக்கவும் எடப்பாடியார்  கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் போராட்டம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்

நமது உரிமை பறிபோகிறது ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார், ஏற்கனவே பலமுறை வெளிநாட்டு சென்று தொழில் முதலீட்டை ஈர்த்து உள்ளார் என்று கூறுகிறார்  இதுவரை எத்தனை தொழிற்சாலை தொடங்கப்பட்டது, அதன் மூலம் எத்தனை வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்ற விவரம் சொல்லப்படவில்லை, ஏட்டு சுரைக்காய் வீட்டுக்கு உதவாது அதேபோல முதலமைச்சர் புரிந்துணர்வு  ஒப்பந்தம் மக்களுக்கு உதவாது என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad