உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடு பலி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 7 September 2024

உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடு பலி

 


உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இரண்டு பசு மாடு பலி


சோழவந்தான் பேட்டை பகுதியில் உயர அழுத்த மின்சாரம் தாக்கி ஒரு லட்சம் மதிப்புள்ள
2 பசுமாடுகள் பலி
மின் வாரிய அலுவலர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாக பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு



மதுரை மாவட்டம்
சோழவந்தான் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ராஜம்மாள் ஆகியோர் பேட்டை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எதிரே 6 பசுமாடுகள் வைத்து பிழைத்து வருகின்றனர்


இன்று அதிகாலை பால் கறக்க செந்தில்குமார் பசுமாடுகள் கட்டியிருந்த இடத்திற்கு சென்று இருக்கிறார் அங்கு இரண்டு மாடுகள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்து கிடந்ததுகண்டு அதிர்ச்சியடைந்து அந்த பசு மாட்டை தட்டி எழுப்ப முயற்சித்து இருக்கிறார் அப்பொழுது செந்தில்குமார் மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது


அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்


இது குறித்து அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறும் பொழுது இந்த பகுதியில் உயர் அழுத்தமற்றும் விவசாயத்திற்கு மின் கம்பிகள் செல்கின்றன  மின்கம்பிகள் தரமாகஇல்லாததால் அடிக்கடி சாதாரண காற்றுக்கு  மின்கம்பி அருந்து விழுவது வாடிக்கையாக நடந்து வருகிறது


இது குறித்து மின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் வரக்கூடிய பணியாளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டிய அவல நிலைஉள்ளது மாடு வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் எப்படி இவ்வளவு பணம் கொடுக்க முடியும் பணம் கொடுக்கவில்லை என்றால் பழுதடைந்துள்ள மின் வயர்களை சரி செய்ய அலுவலர்கள் வர மறுக்கிறார்கள் என்று கூறினர்



மேலும்இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை செய்து சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெருமான பசு மாடுகளை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாய குடும்பத்தைச் சார்ந்த செந்தில்குமார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும்படி இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்


தகவல் கிடைத்தவுடன் பசு மாடுகள் இறந்து கிடந்த இடத்திற்கு வந்த மின் துறை பணியாளர்கள் மின் வயரை சுருட்டி தோப்பில் போட்டு விட்டு சென்றதாகவும் மின்சாரம் தாக்கியதால் உயிரிழக்க வில்லை என அலட்சியமாக பதில் சொல்லி சென்று விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்


இது குறித்து மாட்டின் உரிமையாளர் செந்தில்குமார் மனைவி ராஜம்மாள் கூறுகையில் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருந்தால் மின்சாரம் தாக்கி எனது கணவர் உயிரிழந்திருப்பார் எனது வாழ்க்கை நிர்மூலமாகி இருக்கும் மின்சாரத் துறை பணியாளர்களும் உரிய பதிலளிக்காமல் சென்று விட்டனர் அருந்து கிடந்த மின்வயிரை சுருட்டி தோப்பிற்குள் போட்டு விட்டு சென்று விட்டனர் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் வந்து பார்க்கவில்லை அரசு உடனடியாக இரண்டு மாடுகளை இழந்த எங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் மின்சார வயரை   சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டுள்ள எனது கணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சோழவந்தான் பகுதியில் மின்சார துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் தரப்பிலிருந்து வந்த வண்ணம் உள்ளதால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் விசாரணை செய்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad