திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் இரத்ததான முகாம் மாணவ-மாணவியர்கள் ஆர்வமுடன் இரத்த தானம் செய்தனர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரத்த தான முகாம் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நடைபெற்றது.
உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை டாக்டர் மணிவண்ணன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு மாணவ-மாணவர்களை பரிசோதனை செய்து இரத்த தானம் செய்ய தகுதியுள்ள மாணவ-மாணவர்களை தேர்வு செய்தனர்.
முகாமை துவக்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசியதாவது: ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் புதிய ரத்தம் உருவாகி நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படுகிறது எனவும், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும், இரத்த தானம் செய்து மற்றவர்களுக்கு உதவும் செயல் நமக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதால் மாணவ மாணவியர்கள் அனைவரும் இந்த முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று ஆரோக்கியத்தை பெற வேண்டும் எனக் கூறினார்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற இம்முகாமில் 75க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் இரத்த தானம் செய்தனர். இங்கே சேகரிக்கப்படும் இரத்தம் உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் பதப்படுத்தப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு அவர்கள் ஆரோக்கியம் பெற உதவும் என தலைமை மருத்துவர் டாக்டர் மணிவண்ணன் தெரிவித்தார். இரத்த சேகரிப்பு பணிகளை டாக்டர் கவிஞர் கண்ணன், செவிலியர்கள் பிரியா, வீரலட்சுமி, ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் அபிராமி, ரத்ததான ஆலோசகர் கர்ணன் செய்தனர்.
முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் முனியாண்டி தலைமையில் பேராசிரியர்கள் இராமத்தாய், விஜயராஜன், மணிமேகலை, ஜோதி, இன்பமேரி, ஆறுமுக ஜோதி, மயில், பழனியம்மாள், உடற்கல்வி இயக்குனர் நாராயணபிரபு, சிஸ்டம் அட்மின் உதய கதிரவன், மாணவர்கள் மணிகண்டன், தங்கப்பாண்டி, பதினெட்டாம்படி கருப்பு ஆகியோர் செய்தனர்.
No comments:
Post a Comment