மதுரை திருமங்கலம் அருகே காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வனத்துறை ஊழியர் பலி
திருமங்கலத்தை அடுத்த கல்லுப்பட்டியில் இருந்து நான்கு சக்கர வாகனத்தை சர்வீசுக்காக மதுரையைச் சேர்ந்த வாஹித் சாகித் சா 22 என்பவர் வாகனத்தை ஓட்டி சென்று கொண்டிருந்த போது திருமங்கலத்தை அடுத்த புதுப்பட்டி அருகே எதிர்பாராத விதமாக மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் 32 என்பவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் இறந்த நந்தகுமார் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறையில் பணிபுரிந்து வருகிறார் என்பது தெரியவந்தது.
No comments:
Post a Comment