மதுரையில் கொலை செய்ய பண செலவிற்காக பட்டாகத்திகளுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற ரவுடி உள்பட 7பேர் கைது - 6 பட்டா கத்திகள் மற்றும் வாள் பறிமுதல்.
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் சாலையில் அவனியாபுரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்குரிய வகையில் வாளுடன் நின்றுகொண்டிருந்த மதுரை வடக்குமாசி வீதி பகுதியை சேர்ந்த குமார்(எ) பைப்குமார் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது பைப்குமாருக்கும் வைக்கம் பெரியார் நகரில் உள்ள மச்சசிவா தரப்புக்கும் முன் பகை இருப்பதால் மச்சசிவா தனது கூட்டாளிகளான ரஞ்சித் முத்துப்பாண்டி மூலம் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதால் அவர்கள் இருவரையும் கொலை செய்ய யோசித்து அதற்கு செலவை சரி செய்வதற்காக அவனியாபுரம் வைக்கம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(241, அருண்குமார்(24), ஆரோக்கிய விஜய்(20), ஆகாஷ்(19) , அசோக்குமார்(23), முகம்மது அசன் (24) ஆகியோருடன் சேர்ந்து பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து 7 பேரையும் கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆறு பட்டாகத்தி , வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment