திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள் அடாவடி. வாகன ஓட்டுநர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 2 September 2024

திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள் அடாவடி. வாகன ஓட்டுநர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தல்.

 


திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள் அடாவடி.  வாகன ஓட்டுநர்கள் நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தல்.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள் அடவாடிதனத்தால் உள்ளூர் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர் தினமும் இந்த சுங்கச்சாவடிகளில் தகராறு செய்துதான் கடந்து செல்ல வேண்டியுள்ளது. பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.கடந்த ஜுலை 10ம் தேதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் டோல்கேட்டை அகற்றுவதற்கு மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.கோட்டாச்சியர், நெடுஞ்சாலைத்துறை பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.அதற்க்கு உடன்பாடு ஏற்படவில்லை.இதனால் ஜுலை 30ம்தேதி முழு கடையடைப்பு நடத்தினர்.இதற்க்கிடையில் அமைச்சர் மூர்தியிடமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.இதன் அடிப்படையில் அமைச்சர் உள்ளூர் வாகனங்கள் ஆதார் அட்டை காண்பித்து செல்லலாம் என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் உள்ளூர் வாகனங்கள் சென்று வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மறுபடியும் சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளூர் வாகனங்கள் சென்ற போது கட்டணம் கேட்டுள்ளனர்.இதற்க்கு வாகன ஓட்டுநர்கள் அமைச்சர் கூறியதை கேட்டு விட்டு மீண்டும் கட்டணம் கேட்டால் எப்படி என்று தகராறு ஏற்பட்டது.அதற்க்கு யாராக இருந்தாலும் எழுத்து பூர்வமாக இருந்தால் கொண்டு வாருங்கள் என்று அடவாடியாகா கூறியுள்ளார்கள். இதற்க்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad