மூன்று வருடங்கள் கடந்தும் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர் தேக்க தொட்டி-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரடிகல் கிராமத்தில் 3,99,942 மதிப்பீட்டில் ஒரு போர் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் ஒரு போர் 19 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி கடந்த மூன்று வருடங்களாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அடுத்த கரடிகல் கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் அந்த பகுதியில் இருபது வருடங்களுக்கு மேலாக தண்ணீர் பிரச்சனை இருந்து வந்ததாகவும். அதனை தடுக்க கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்குள் புதிதாக 19 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த நீர்த்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வராததால் கிராம பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக பல கிலோமீட்டர் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக அந்தப் பகுதி கிராம மக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், பொதுப்பணித்துறை, வட்டாட்சியர் அலுவலகம் என பல்வேறு துறைகளில் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் நீர் தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வருவதற்காக சாலை மறியல் ஈடுபட்டோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் இதுவரையும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பெண்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
மேலும் ராமச்சந்திரன் என்கிற மின்வாரிய ஊழியர் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு பதிக்கக்கூடிய பைப்புகளை பதிக்க விடாமல் ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் போர்களுக்கு மின்சார வசதி செய்து தராமல் மின்வாரியம் இழுத்து அடிப்பது செய்வதாக தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீர் தேக்க தொட்டியை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருமங்கலம் செய்தியாளர்
R.வினோத் பாபு
No comments:
Post a Comment