கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றியங்கள், நகராட்சி, பேரூராட்சி வாரியாக வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் பேச்சு
மதுரை கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழக ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினரகளின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை நிகழ்ச்சி திரளியில் நடைபெற்றது .
இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், தமிழரசன், தவசி, மாணிக்கம், மாவட்ட கழக நிர்வாகிகள் சி முருகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், வக்கீல் திருப்பதி, மாநில நிர்வாகிகள் ஜெயராமன், வெற்றிவேல், ஏகேபி சிவசுப்பிரமணியன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், சரவணபாண்டி, துரைப்பண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது
அதிமுக உறுப்பினர்களின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 7 ம் தேதி புதன்கிழமை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மன்னாடிமங்கலத்தில் நடைபெற்றது தற்போது திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் திரளியில் நடைபெறுகிறது.
9 தேதி வெள்ளிக்கிழமை மதுரை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், வயலூரில் நடைபெறுகிறது.
10 தேதி சனிக்கிழமை உசிலம்பட்டி ஒன்றிய கழத்தின் சார்பில் உசிலம்பட்டி நடைபெறுகிறது.
12ஆம் தேதி திங்கள் கிழமை கள்ளிக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் ஓடைப்பட்டியில் நடைபெறுகிறது.
13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் கச்சைகட்டியில் நடைபெறுகிறது .14ஆம் தேதி புதன்கிழமை சோழவந்தான் பேரூர் கழகத்தின் சார்பில் சோழவந்தானில் நடைபெறுகிறது
15ஆம் தேதி வியாழக்கிழமை அலங்காநல்லூர் ஒன்றிய கழத்தின் சார்பில் அலங்காநல்லூரில் நடைபெறுகிறது.19ஆம் தேதி திங்கள் கிழமை டி. கல்லுப்பட்டி கல்லுப்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெறுகிறது
20ம் தேதி செவ்வாய்க்கிழமை சேடப்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் அத்திப்பட்டியில் நடைபெறுகிறது. 21 ஆம் தேதி புதன்கிழமை வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வாடிப்பட்டியில் நடைபெறுகிறது
22 ஆம் தேதி வியாழக்கிழமை டி கல்லுப்பட்டி பேரூராட்சி சார்பில் கல்லுப்பட்டி நடைபெறுகிறது.
23ஆம் தேதி வெள்ளிக்கிழமை செல்லம்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் செல்லம்பட்டியில் நடைபெறுகிறது.24 ஆம் தேதி சனிக்கிழமை அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் அலங்காநல்லூரில் நடைபெறுகிறது
25 தேதி ஞாயிற்றுக்கிழமை ஏழுமலை பேரூராட்சி சார்பில் ஏழுமலையில் நடைபெறுகிறது.
26 ம் தேதி திங்கட்கிழமை பாலமேடு பேரூராட்சி சார்பில் பாலமேட்டில் நடைபெறுகிறது. 27 ம் தேதி செவ்வாய்க்கிழமை பேரையூர் பேரூர் கழகத்தின் சார்பில் பேரையூரில் நடைபெறுகிறது .28-ம் தேதி புதன்கிழமை உசிலம்பட்டி நகரத்தின் சார்பில் உசிலம்பட்டியில் நடைபெறுகிறது.29 ஆம் தேதி வியாழக்கிழமை திருமங்கலம் நகரக் கழத்தின் சார்பில் திருமங்கலத்தில் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி வாரியாகவும் , நகர ,பேரூராட்சிகளில் உள்ள வார்டுகள் வாரியாகவும் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்.
திமுக அரசு பொது விநியோகத் திட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது, தமிழகத்தில் 2 கோடி 18 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது இதன் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு,எண்ணை, சீனி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
5 கிலோ கோதுமை வழங்கும் குடும்ப அட்டைகளுக்கு தற்போது ஒரு கிலோ தான் வழங்கப்படுகிறது அது கூட தரம் இல்லாததாக உள்ளது. அதேபோன்று பருப்பு ,பாமாயில் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது, இது குறித்து ஏற்கனவே 82 வருவாய் மாவட்டங்களில் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதற்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கம் கொடுத்தார் அது சரியானதாக இல்லை.உணவு பாதுகாப்பதில் அரசு தோல்வி அடைந்து விட்டது அது மட்டும் இல்லாமல் அரிசி கூட
துர்நாற்றம் வீசுகிறது அதைகோழி கூட சாப்பிட மறுக்கிறது.
இன்றைக்கு இந்த இயக்கத்தில் ஆணிவேராக அதிமுக கிளைச் செயலாளர் உள்ளீர்கள் ,இன்றைக்கு திமுக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கி உள்ளது, நம்மிடமிருந்து பயிற்சி பெற்ற அதிமுகவினர் தான் திமுகவை வழிநடத்துகிறார்கள் இன்றைக்கு திமுகவில் ஆள் பிடித்து கட்சி நடத்தும் அவலநிலை உள்ளது. கோடிகளை வைத்து விலை பேசியும், பதவி ஆசை காட்டியும் திமுக செய்து வருகிறது ஆனால் அந்த முயற்சியில் தோற்றுப் போனார்கள். இந்த இயக்கத்தை சீண்டி பார்த்தால் தோற்று தான் போவார்கள்.
No comments:
Post a Comment