ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருமங்கலம் கோட்டாட்சியரிடம் எட்டுநாழி புதூர் ஊர்மக்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த எட்டுநாழி புதூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மூணு ஏக்கர் பரப்பளவு நிலத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் 2007 கலைஞரின் இலவசத் திட்டத்தில் நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதாக கூறி முருகன் மனைவி அம்மையக்காள்,மற்றும் பாண்டி மனைவி வெள்ளையம்மாள் இருவரின் பெயரில் அரசு இலவச பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கிராம மக்கள் புகாரளித்தனர்.
இந்த புகாரின் பேரில் அப்போது உள்ள வருவாய்கோட்டாட்சியர் இந்த இலவச பட்டாவை ரத்து செய்துள்ளார்.
தற்போது இவர்கள் இருவருக்கும் மீண்டும் பட்டா வழங்கப்பட்டதாக குறி கிராம மக்கள் அந்த நிலத்தை பள்ளி விளையாட்டு மைதானத்திற்கும் அரசு நியாய விலை கடைக்கும் சமுதாயக்கூடத்திற்கும் மற்றும் தாங்கள் வைத்திருக்கும் ஆடு மாடு செல்வதற்கு பாதை வேண்டியும் இந்த நிலத்தை மறுபடியும் கிராம பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று இன்று சுமார் 200கிராம பொதுமக்கள் திருமங்கலம் கோட்டாட்சியர் சாந்தியிடம் மனு அளித்தார்கள் இந்த மனுவை பரிசீலனை செய்த கோட்டாட்சியர் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்து இந்த கிராம மக்களின் கோரிக்கையை உடனடியாக நிவர்த்தி பண்ணித் தருமாறு கூறினார்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைத்து எங்களுக்கு வரும் வரை சாலை மறியல் மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதம் செய்யப் போவதாகவும் கூறினார்கள்.
No comments:
Post a Comment