கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்து மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய வருவாய் மாவட்டத்தின் சார்பில் மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்
கழக பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றதில் பொதுமக்கள் பங்கேற்பு
மதுரை
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைகினங்க கள்ளர் சீரமைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் விடியா திமுக அரசை கண்டித்தும், பள்ளி கல்வி துறையோடு இணைக்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை, திண்டுக்கல்,தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களில் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம்செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே கழகப் பொருளாளர் திண்டுக்கல் தி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கழக துணை பொதுச் செயலாளர் நத்தம் இரா விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி வி ராஜன்செல்லப்பா, கழக அமைப்புச் செயலாளர் எஸ்.டி. கே ,ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடைராமர், கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. வி.ஆர். ராஜ்சத்யன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் என்ற செல்வம்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, மாணிக்கம், ஏகேடிராஜா, முன்னாள் எம்பி பார்த்திபன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, கருப்பையா, டாக்டர் சரவணன், தமிழரசன், எஸ் எஸ் சரவணன், நீதிபதி, ஆண்டிபட்டி ஊராட்சி குழு தலைவர் லோகிராஜன், தேனி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வி.டி நாராயணசாமி, ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா காசிமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்தியபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவனர் கே.ஏ முருகன், தென்இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் கே.சி. திருமாறன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சேனை தலைவர் மகாராஜன், தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் சேர்ந்த வக்கீல் சங்கிலி, பிரமலை கள்ளர் சமுதாய தலைவர் உதயம் ராஜேந்திரன், முக்குலத்தோர் எழுச்சி பேரவை சேர்ந்த ரவிக்குமார், மூவேந்தர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நாகராஜ் தேவர், அப்துல்கலாம் அறிவியல் விவசாய அமைப்பை சேர்ந்த மூர்த்தி,பிரசிடெண்ட் கிளப் சேர்ந்த லட்சுமணன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஆர் பி உதயகுமார் பேசியதாவது
இந்த உண்ணாவிர அறப்போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, நடைபெறும் போராட்டம் சட்டவிரோத போராட்டம் அல்ல, சட்ட உரிமையை காக்கும் போராட்டமாகும்.
அதனை தொடர்ந்து வழக்கறிஞர் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி பெறப்பட்டது அதனை தொடர்ந்து நடைபெறும் இடத்தை மாற்றி அனுமதி தந்தார்கள். திமுக அரசின் காவல்துறை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியஅடக்கு முறையை காட்டிலும் கையாண்டு வருகிறது.
தற்போது இந்த உண்ணாவிரத்தை திசை திருப்ப, அரசு உப்பு சப்பு இல்லாமல் அறிக்கையை வெளியிட்டுள்ளது .இது வெற்று அறிக்கை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது.இது உதவாத அறிக்கை பள்ளிக்கல்வித்துறையில் இணைக்கப்படவில்லை என சிறு விளக்கம் கொடுக்கப்படுகிறது இன்றைக்கு வரலாற்றை அழித்து நிர்வாக மாற்றத்தை அரசு ஏற்படுத்துகிறது இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.
இன்றைக்கு கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த தியாகிகளுக்கு 5 ஏக்கர் நிலத்தில், ஒன்னேகால் கோடியில் மணிமண்டபத்தை எடப்பாடியார் அமைத்து தந்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பது போல, இந்த பகுதி மக்களுக்கு இதுபோன்று எடப்பாடியார் செய்து வருகிறார் .
இன்றைக்கு இந்த போராட்டத்தை திசை திருப்ப அரசு போலித்தனமாக அறிக்கை வெளியிட்டு வருகிறது, இந்த வெற்று அறிக்கையில் மக்களுக்கு என்ன பயணம் தரப் போவதில்லை, அரசாணை எண் 40 மூலம் பிற்பட்டோர் மிகவும் பிற்போட்டோர், கள்ளர் கல்வி நிறுவனங்களை இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறையில் இணைக்கிறது.
இதனை கண்டித்து தான் மதுரை, திண்டுக்கல், தேனி வருவாய் மாவட்ட சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது வரலாற்றை குழிதோண்டி புதைக்கும் முகாம்திரம் அறிவிப்பு எண் 40 ஆகும்.
முதலில் விடுதிகள், அதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள், அதனை தொடர்ந்து தியாகிகளின் வரலாறுகளை மறைக்க நினைப்பார்கள். வரலாற்று ஆவணம் இன்றி பேசுகிறார்கள் இன்றைக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் எல்லாம் தனியார் பள்ளிகாட்டிலும் அதிக அளவில் தேர்ச்சிகள
No comments:
Post a Comment