மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சைகட்டி ஊராட்சி பாண்டியர் கோட்டை பகுதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் இல்லாமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து, கச்சைகட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என, புகார் தெரிவிக்கின்றனர்.
குடிநீருக்காக குழாய்கள் பதிக்கப்பட்டும், குடிநீர் இணைப்பு வழங்காததால், குடிதண்ணீர் இல்லாமல், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதாக, கூறுகின்றனர். இது குறித்து, வாடிப்பட்டி யூனியன் ஆணையாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment