இதனால், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டு, மாற்று பேருந்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இரவு எட்டு மணி அளவில் நடு வழியில் பேருந்து பழுதாகி நின்றதால், இதில் பயணம் செய்த பயணிகள் மாற்று பேருந்து இல்லாத நிலையில், வெகு நேரம் ஆகியும் அடுத்த பேருந்து வராததால், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பரிதாப நிலை ஏற்பட்டது.
சோழவந்தான் பகுதியில் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நின்று கொள்வதாலும், பராமரிப்பு இல்லாத பேருந்துகளை இயக்குவதாலும், தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து, போக்குவரத்து துறை நிர்வாகமோ அதிகாரிகளோ பொது மக்களைப்பற்றி சிறிதளவு கூட கவலைப்படுவது இல்லை. அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதும் இல்லை என, பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஆகையால், இது குறித்து பயணிகள் கூறும் போது: தொடர்ந்து, அரசு பேருந்துகளின் நிலை பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. இது குறித்து, அதிகாரிகளோ, போக்குவரத்து நிர்வாகமோ கவலைப்படுவதாக தெரிவதில்லை. மேலும், அதிகாரிகளும் போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கும் முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றதாக தெரியவில்லை. ஆகையால், நாங்களே முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாராக அனுப்ப முடிவு செய்துள்ளோம் என, தெரிவித்தனர்.
No comments:
Post a Comment