சிறைக்கைதிகளுக்கு வழங்கும் தரமான உணவுகள் கூட விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை:
விடுதிகளுக்கு வழங்கும் அரிசிகளில் பூச்சி புழுக்களாக உள்ளது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி்ஒரு பக்கம் என்பது போல உயரதிகாரிகள் நடவடிக்கை
எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் விரைவில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் நிறுவனத்தலைவர் சகாதேவன் பேட்டி
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மதுரை ,தேனி ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் சிவகங்கை ,திருச்சி ,கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் மாநிலத்தலைவர் சகாதேவன் பேசும்போது
விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட துணை ஆட்சியர்கள் பதவி வழங்கப்பட வேண்டும், அனைத்து கல்லூரி மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி விடுதிகளுக்கு தற்போதுள்ள பட்டதாரி காப்பாளர்கள் என்ற பணியிடத்தை முதுகலை பட்டதாரிகள் பணியிடமாக தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் , மாணவர்களுக்கு வெளி நபர்கள் மூலமாக உணவுகளை தயாரிக்கும் GENTRALIZED திட்டத்தை முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் அரசாணை எண் 93/1 - 2012ல் உள்ளது போல ஆசிரியர்கள் போலவே பணியில் இருக்கக்கூடிய காப்பாளர்களுக்கும் கோடை விடுமுறை முடிகிற வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.,
இது 2012 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மறுக்கப்பட்டுள்ளது அதனை நிறைவேற்றி தர வேண்டும் , விடுதிகளில் பணிபுரியும் போது இறந்து ஊழியர்களுடைய குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் மூன்றாண்டு காலமாக பதவி வழங்கப்படாமல் தேங்கிய நிலையில் கிடைக்கிறது.
எனவே 53 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
விடுதிகளுக்கு தேவையான மின் கட்டணத்தை விடுதி காப்பாளர்கள் கட்டாமல் துறை சார்ந்த அலுவலர்களே கட்டப்பட வேண்டும் மாணவர்களுடைய தங்க வைப்பதற்கு நல்ல தரமான விடுதிகளும், மாணவர்களுக்கான அரிசியும் வழங்கப்பட வேண்டும்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கக்கூடிய அரிசிகளை தவிர்த்து தரமான அரிசி மளிகை காய்கறிகள் வழங்க சிறப்பான உணவு கொடுத்து கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும்
விடுதிகளுக்கு தேவையான அரிசி கோதுமை எண்ணெய் அனைத்தும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் மூலமாக வழங்கப்பட வேண்டும் விடுதகளுக்கு தேவையான மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற கூட்டுறவு துறைகள் மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக சப்ளை செய்ய வேண்டும்
தமிழகத்தில் இருக்கக்கூடிய மொத்த விடுதிகளில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட காப்பாளர் பணியிடங்கள் மூன்றாண்டுகளாக காலியாகவே உள்ளது இதனை நிரப்ப வேண்டும் விடுதி சமையல் பணி செய்யக்கூடிய சமையலர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டு உள்ள்ளது அதனையும் பூர்த்தி செய்ய வேண்டும்
விடுதிகளில் பணிபுரியக்கூடிய பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நிரந்தர பணியாளராக ஆணை வழங்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள சிறைவாசிகளுக்கு வழங்கக்கூடிய உணவுக்கான ஒருநாள் கட்டணம் விடுதி மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகம் கைதிகளுக்கு உணவு கட்டணம் அதிகம். மாணவர்களுக்கு உணவு கட்டணம் மிக மிகக் குறைவு இதனை உயர்த்தி தரப்பட வேண்டும்
மருத்துவமனை சிறைச்சாலை போன்றவைகளில் நபருக்கு அரிசி பொருட்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது அந்த அடிப்படையில் விடுதி மாணவர்களுக்கு உணவுகளை தொகையாக நிர்ணயம் செய்யாமல் ரேஷன் அளவு பொருட்கள் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும்,
இது போன்ற அனைத்து கோரிக்கைகளையும் அரசாங்கம் செய்ய விட்டால் இந்தத் துறையை அழிவை நோக்கிசெல்லும்,
இந்த துறையை அரசாங்கம் காப்பாற்றப்பட வேண்டும் இங்கிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவர்கள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளாக உருவாகி இருக்கிறார்கள் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கல்லூரி கல்வி என்ற கானல் நீரை நிஜமாக காட்டியது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகள் தான்
கோரிக்கைகளை வெகு விரைவாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் இந்த கோரிக்கை நிறைவேற்றாத பட்சத்தில் காலம் கடத்தும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளையும் ஒன்று திரட்டி தலைமைச் செயலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும்
No comments:
Post a Comment