திருமங்கலத்தில் போதை பொருள் எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த எம். எல். ஏ.
ஆளும் கட்சி திமுக ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் போதைப் பொருள் கடத்தல் கள்ளச்சாராயம் பலி ஆகியவை நடைபெற்றது. இதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக திருமங்கலம் மேற்கு மாவட்ட ஒன்றிய கழகத்தில் சட்டமன்றத் எதிர்கட்சி துணை தலைவர் ஆர். பி உதயகுமார் தலைமையில் ஆலம்பட்டியில் நடைபெற்றது.போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்து திமுக அரசு மக்களை ஏமாற்றி போதைக்கு அடிமையாகி தமிநாட்டையும் மக்களை ஏமாற்றி வருகிறது என்று கூறினார்.மேலும் கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற கோரி வருகின்ற ஜுலை 30ம் தேதி முழு கடையடைப்பிற்க்கு அதிமுக அரசு ஆதரவு அளிக்கும்என்று கூறினார். இந்நிகழ்வில் திருமங்கலம்ஒன்றிய செயலாளர் அன்பழகன், யூனியன் சேர்மன் லதாஜெகன், முன்னிலை வகித்தனர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், கருப்பையா, மாவட்ட அவரை தலைவர் மூ. சி. சோ. முருகன், வழக்கறிஞர் தமிழ்செல்வன், உச்சப்பட்டி செல்வம், சுமதி சாமிநாதன், மற்றும் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment