மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், தேனி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு கிராமம் கிராமமாக சென்று, தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன்: சேடபட்டி ஊராட்சியில், உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று நன்றி தெரிவித்துள்ளேன், எந்த எம்.பியும் இது போன்று வந்து நன்றி தெரிவத்தது இல்லை என, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கள்ளர் பள்ளிகளை, அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தாக தவறான பிரச்சனையை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர்.
அது தவறு, நானும் முதல்வர்-யை சந்தித்து கள்ளர் பள்ளிகள் கள்ளர் பள்ளிகளாகவே தொடர்வதற்கு முயற்சி செய்வேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக முடிவெடுப்பது முதல்வர் எடுக்க கூடிய முடிவு, அவர் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள், கட்டுப்படுகிறோம். வரவேற்கிறோம், என பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment